HAPPY DEEPAVALI TO MEMBERS & READERS
நாகரீகம்,கல்வி,பொருளாதாரம்,அறிவியல் அறிவு என பல வளர்ந்து இருந்தாலும் மனித சமுதாயம் இன்றும்
மதித்து வருவது அவரவரின் மதம் ,கலாச்சாரம் மற்றும் மண் சார்ந்த
நம்பிக்கைகளும் பண்டிகைகளுமே.அவற்றில் தீபாவளிப் பண்டிகையும் ஓன்று. நாத்திக மக்கள் அதை மனம் சார்ந்த
பண்டிகையாகக் கொண்டாடுவர் ஆன்மீக மக்கள்
அதை மதம் சார்ந்த பண்டிகையாகக்
கொண்டாடுவர் .இருப்பினும் பண்டிகை என்றாலே குதூகலமும்
கொண்டாட்டமும்,மனதின் உற்சாகம்,சந்தோஷம் இவைகளை மேம்படுத்தவும் மட்டும் தான்
இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து
போக வேண்டுமென்றும்,
அக அழுக்கு இல்லாமல்
போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.
நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை
அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய
தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள். அந்த நிலை
மாறி அகத்தில் விளக்கு ஏற்றுவோமாக.
நன்றி மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment